ஞாயிறு, 20 மே, 2012
நிலவு உதயமான நாள்
Posted by Unknown at 10:43 PM 0 comments
இன்று இவ்வருடத்தின் முதல்
தீபாவளி
(என்னவள் பிறந்தநாள்)
இருபது வருடம் முன்பு நிகழ்ந்த அதிசயம்- ஆம் அன்று தான் இப்பூமிக்கு இரண்டாம் நிலவு உதயமானது-அழுகையோடு பிறக்கும் குழந்தைகளுக்கு மத்தியில் அழகோடு பிறந்தவள்-அதனால் தான் என்னவோ அவள் பிறந்த மருத்துவமனைக்கு ராசி கூடிவிட்டதாகவும்-அழகான குழந்தை பெற்றெடுக்க அங்கு தான் பிரசவம் பார்க்க வேண்டுமென அடம் பிடிகிறார்களாம் கர்ப்பிணி பெண்கள்..

Please pray for us; We have to be happily live more than any other....
செவ்வாய், 27 மார்ச், 2012
திருட்டு வாகனமா?
Posted by Unknown at 12:43 AM 1 comments
திருட்டு வாகனமா? சில விநாடிகளில் கண்டுபிடிக்கலாம்!
நண்பர்களுக்கு வணக்கம்...
ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம். மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை உடனே அடையாளம் கண்டுகொள்ள உதவும்.
092123 57123 என்ற எண்ணுக்கு vahan> space <பதிவு எண்- வாகனத்தின் பதிவு எண்ணை இடைவெளியின்றி டைப் செய்து அனுப்பினால், அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய எஸ்எம்எஸ் வந்துவிடும்.
இந்த வசதி 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அல்லது 2003-ம் ஆண்டுக்குப் பிறகு ஏதாவது ஒரு காரணத்துக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வாகனம் சென்றிருக்க வேண்டும்.

நன்றி சிவசங்கர் அண்ணன்..
புதன், 21 மார்ச், 2012
ரொமான்ஸ் ரகசியம் (1)
Posted by Unknown at 2:30 AM 0 comments
ரொமான்ஸ் என்பது ஊடலின் ஒருபகுதி என்பது இன்றைய தம்பதிகளுக்கு தெரிவதில்லை. ரொமன்ஸை சினிமாவிற்கும் அதில் வரும் கதை மற்றும் கதாபாத்திரத்திற்கு மட்டும் சம்பந்தமான விசயமாகவே பலர் கருதுகிறார்கள். கலாச்சாரத்தோடு ஒன்றிய நம் தேசத்தில் தம்பதியர், நான் ரெடி..! நீங்க ரெடியா? என்று நேராகவோ.. மறைமுகமாகவோ கேட்பதில்லை. ஆசை அருபது நாள் மோகம் முப்பது நாள் என்பதோடு வாழ்வின் இனிய பயணம் முடிந்து விடுவதில்லை.கணவன்-மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், தங்கள் உறவை திருப்திகரமாக்கிக் கொள்ளவும் ரொமான்ஸ் அவசியம். திருமண உறவு மூழ்கிப்போகாமல் காப்பாற்றும் ரகசிய பார்முலாவில் மிகவும் முக்கியமான விசயம் ரொமான்ஸ்! நாம் வாழும் வாழ்க்கையை கடைசிவரை அதன் கிக் குறையாமல் கலர்புல்லாக வைத்திருக்கும் உணர்வு ரொமான்ஸ்..
இனிதாக ஆரம்பிங்க
திருமண வாழ்க்கையில் கணவன்-மனைவி கலகலப்பாக இருக்க முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
உங்கள் வயதை மறப்பது தான்...! ஆம் , இளைஞர்கள் திருமணத்திற்கு முன்புவரை நண்பர்களுடன் கலகலப்பாக கடி ஜோக்கும், வேடிக்கைப் பேச்சுமாக இருப்பார்கள். திருமண்ம் முடிந்த அடுத்த நிமிடமே தனக்கு ஏதோ பத்து வயது கூடிவிட்டது போல உணர ஆரம்பித்து விடுவார்கள். சரி அவன் தான் அப்படி நினைக்கிறான்-னு பார்த்தால், அவனது சொந்த பந்தம், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் தரும் அட்வைஸ் வேறு இன்னும் அவன் வயதை கூட்டுகிற மாதிரி இருக்கும். கண்ணா நீ முன்ன மாதிரி விளையாட்டுப்பிள்ளை இல்லை.. இனிமேல் உன் வால்தனத்தை எல்லாம் சுருட்டி வெச்சிட்டு குடும்பஸ்தனா லட்சனமா பொருப்பா நடந்துக்கோ-னு உபதேசம் குவியும்.. இதையெல்லாம் கேட்ட அந்தப் பையன் ஓகோ குடும்பஸ்தன்-னா இப்படித்தான் இருக்கனும் போல-னு நினைக்கிறான். எந்த ஒரு விசயத்தையும் சீரியஸாக அணுகுவது தான் குடும்பஸ்தனுக்கு அழகு என்பதுபோல் நம் சமூகம் அவனுக்கு ஒரு வரைபடம் காட்டுகிறது. நாமும் அந்த வரைபடத்தில் தான் இருக்க வேண்டுமென்று தன்னைப் பொருத்திக் கொள்கிறான்..
ஒரு சேம்பிள் சொல்றேன்..
அந்த இளைஞன் வாரத்திற்கு இரண்டு நாள் சினிமாவிற்கு போவதும்.. விசிலடித்து பாட்டு பாடுவதும்.. டிவி-யில் காதை பிழக்கும் அளவு சத்தம் வைத்து டான்ஸ் ஆடுவதுமாக இருப்பவன் எதற்காக திருமணத்திற்குப் பின் இதையெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும்?
சொல்லப்போனால், திருமணத்திற்குப் பின் அவன் தன் மனைவியுடன் சேர்ந்து இதை தொடரலாமே..!
மனைவி காலையில் அரைத் தூக்கத்துடன் பால்பூத்-ல் நிற்க்கும் போதும், பஸ்சில் கூட்டத்துடன் கூட்டமாக செல்லும் பொழுது வரும் டென்சனில், அலுவலக மேனேஜரின் காரப்பேச்சில் சிக்கும் போதும் அவளுக்கு ஏற்படும் மன இறுக்கத்தை உடைக்க கணவனின் விசிலும், டான்சும் உதவலாமே....!
அன்பு மனைவிக்கு ஒரு முழம் பூ, நாலுவரிக் கவிதை, பிரியமான ஒரு சொல், எதிர்பாராத முத்தம், செல்லமாக ஒரு தட்டல், கிளுகிளுப்பான ஒரு கிள்ளல் என்று எத்தனையோ விசயங்கள் சந்தோசப்பட வைக்கின்றன.இது மட்டும் ரொமான்ஸ் அல்ல...
* உங்கள் கணவர் அல்லது மனைவி மிகவும் டென்சனாக ஒரு வேளையைச் செய்து கொண்டிருக்கும்பொழுது அந்த டென்சனை மறந்து அவர் ரசிக்கும் விதத்தில் ஜோக் அடிப்பவரா நீங்கள்? அப்படியானால் நீங்களும் ஒரு ரொமான்டிக் நபர் தான்.
* அடிக்கடி, அதிலும் குறிப்பாக வாழ்க்கையின் சுவாரஸ்யங்கள் குறையும் நேரங்களில் எல்லாம் நீங்கள் இருவரும் முதன்முதலாகச் சந்தித்துக்கொண்ட அந்த நிமிடங்கள் பற்றியும், காதலும் படபடப்பும் பின்னிப்பிணைய நீங்கள் பேசிய டயலாக்குகள் பற்றியும் நினைத்துப் பார்த்துத் தன் துணையுடன் பகிர்ந்துகொள்ளும் நபரா நீங்கள்? அப்படியானால் நீங்களும் ஒரு ரொமான்டிக் நபர் தான்.
செவ்வாய், 20 மார்ச், 2012
..பூலோக தேவதை..
Posted by Unknown at 7:27 AM 0 comments
இவளின் பாதமோ பூமியில்.. ஆகவே இவள் மானிடப்பிறவி தான் என்ற முடிவிற்கு வருகிறான்.
அவள் அருகே செல்கிறான்-அவள் அழகில் கண் சிமிட்ட மறக்கிறான்-அன்பே என்கிறான்-சற்றே தடுமாற்றத்தோடு நான் உன்னை காதலிக்கிறேன் என்கிறான்-மெளனம் காக்கிறாள்-நீ சம்மதம் மட்டும் சொல் உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன் என்கிறான்-அவளோ நாள் பட்ட நோய் போல் பதில் கூறாமல் போகிறாள்.. அன்று மாலையில் காதல் ஏக்கத்தோடு அலுத்துத் தூங்குகிறான். காதல் விடுமா? கனவிலும் வருகிறாள் அந்த காரிகை.. காதலும் தருகிறாள்.. இனியும் தம்மால் பொருக்க முடியாதென்று எழுந்து அமர்கிறான். பூங்காவில் சந்தித்த அந்த மோகனக்குமாரியின் அழகை எண்ணி எண்ணி புலம்ப ஆரம்பிக்கிறான். இரவில் அவன் புலம்பியதை அம்பாக திரித்து காலையில் அவள் விழியில் செலுத்த எண்ணி படுக்கலானான்.
மறுநாள் காலை அவளைப் பார்க்கிறான். சாதாரணக் காதலர்கள் பார்க்கும் பொழுது என்ன நடக்கும்? உணர்ச்சிகள் மீதூறும்-உடல் சூடேறும் இதுதானே நடக்கும். ஆனால் இவனுக்கோ மெய்தளர்ந்து விட்டது.
ஏ பெண்ணே.. நீ எப்படி இருக்கிறாய் தெரியுமா?
.. கட்டாத பூமாலை ..
.. கற்பக பூ மாலையில் வாசம் தரும் வண்டு ..
.. வேந்தர்களிடம் இல்லாத செல்வம் ..
.. மேகம் சேராத மின்னல் ..
.. தெவிட்டாத தேன் ..
.. தாகம் தணிக்கும் தனி மருந்து ..
வட்டமுகக் கட்டழகுப் பெட்டகமே.. வாயேன் இப்பக்கம்.. தாயேன் ஒரு முத்தம்.. ஜோடி காதலர்கள் நாமே.. வா ஆடி மகிழ்வோம் மானே..
பேராசை என்னும் ஆழ்கடலில் விழுந்துவிட்டேன் உனது தோள் என்னும் கப்பலில் ஏற்றிக் கரை சேர்க்க மாட்டயா? - என்று அவளை அணு அணுவாகப் பிளந்துகட்டுகிறான்- மெளனம் கலைத்தால்.. வெட்க்கத்துடன் தலைகுனிந்து ஏரிக்கொள்ளுங்கள் நாம் யாருமில்லா தனித் தீவில் குடிபுகுவோமென்று...
..ரணம்..
Posted by Unknown at 12:09 AM 0 comments
..காதல் தோல்வி..
இந்த நாட்டில் பலருக்கு காதலிக்கத் தெரிகிறது ஆனால் சிலருக்குத் தான் நிறைவேற்றிக் கொள்ளத் தெரிகிறது.
இங்கே எத்தனையோ காதல்கள் விதைக்கப்பட்ட மறுநாளே புதைக்கப்படிகிறது. பல காதல் பூக்கள் கல்லரையில் விழவே பூக்கின்றன. சில காதல் கனிகள் கனிகின்ற அவசரத்தில் விம்பிவிடுகின்றன. அதற்கு
காதலர்கள் மட்டும் காரணமல்ல.. மண், வெப்பம், காற்று, ஈரம் இந்த நான்கு காரணங்களில் ஒரு காரணம்
குறைந்தாலும் விதை முளைக்காது என்பது மாதிரி.. ஜாதி, மதம், மரபு, பொருளாதரம் இந்த நான்கில் ஒன்று குறைந்தாலும் கூட காதல் கற்பத்திலேயே கறைந்து விடுகிறது. இந்த கடிதம் எழுதுபவன் காதலை ஏற்றுக்கொண்டவன் இறுதியில் காதலியை ஏற்றுக்கொள்ள முடியாதவன்.
பருவம் காதல் எனும் சிறகு குடுத்தது ஆனால் எதார்த்தம் என் சிறகுகளை கத்திருக்கிறது..
கால்களில் லாடங்களோடு உன்னோடு ஓடிவர முடியாது காதலி என்று கண்ணீர் வாசகம் பேசுகிறான்.
இப்படித்தான் இந்தியாவில் பல காதலர்களுக்கு...
" உன்னை காதலிக்கிறேன் என்பது தமிழ்த்தாய்வாழ்த்தாகவும்..
என்னை மறந்துவிடு என்பது தேசியகீதமாகவும் ஒளிக்கிறது.."
இதோ அவனது மனதின் குறியீடு (ஏன் நம்மில் பலரது மனக் குறியீடும் இதுதான்) :
சொன்னவன் நான் தான் - உனக்கும் சேர்த்து சுவாசிக்கிறேன் என்று சொன்னவன் நான் தான்..
சொன்னவன் நான் தான் - உன்னைத் தவிர என் கண்களுக்கு வேறு எதையும் பார்க்கத் தெரியவில்லை என்று சொன்னவன் நான் தான்..
நம் திருமணத்தில்
கடல் முத்துக்களையும்..
வானம் நட்சத்திரத்தையும் அர்ச்சனை தூவும்
என்று சொன்னவன் நான் தான்..
ஒருவேளை நாம் பிரிந்தால்...!
மழை மேல் நோக்கிப் பெய்யும்..
காற்றும் இடைமறிக்கும்.. என்று சொன்னவன் நான் தான்..
இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால் இதை சொல்வதும் நான் தான்..
" என்னை மன்னித்து விடு
என்னை மன்னித்து விடு"
நான் காதல் கொண்டது நிஜம்.. கனவு வளர்த்தது நிஜம்.. எனது இரத்தத்தில் இரண்டு அனுக்கள் சந்தித்து கொண்டு உனது பெயரை உச்சரித்தது நிஜம்.. காதலியைத் தெரிந்த எனக்கு காதலிக்கத் தெரியவில்லை..
(இந்தியா காதல் பூமிதான்.. காதலர் பூமியல்ல) காதலுக்கு சிறகு மட்டுமெ தெரியும் ஆனால் திருமணத்திற்குத் தான் கால்களும் தெரியும்.. எனக்கு சிறகு தந்த காதலியே என் கால்களின் லாடத்தை யார் அறிவார்? சொல்கிறேன்..
" என் தாயைவிட சாய்ந்த நாற்காலியை அதிகம் நேசிக்கும் என் தந்தை "
" சீதணம் கொண்டுவந்த பழைய பாய் போல் கிழிந்த என் தாய் "
" தான் பூப்பெய்த செய்திகூட புரியாத என் தங்கை "
" கிளிந்த பாயில் படுத்துக் கொண்டு கிளியோபாட்ராவை நினைத்து ஏங்கும் என் அண்ணன் "
" கறுப்பு-வெள்ளை தொலைகாட்சியில் கலர் கனவு காணும் என் தம்பி "
இத்தனை பேருக்கும் மாதா மாதம் பிராணவாயு வழங்கும் நான் கால்களில் லாடங்களோடு எப்படி உன்னுடன்
ஓடி வருவேன்.. என்னை மன்னித்து விடு.. என்னை மன்னித்து விடு..
ஐரோப்பாவில் கல்யாணத் தோல்விகள் அதிகம்.. இந்தியாவில் காதல் தோல்விகள் அதிகம்.. இந்தியா காதலின் பூமிதான்.. காதலர் பூமியல்ல...
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).

பட்டாம்பூச்சி
Posted by Unknown at 12:02 AM 0 comments
எந்தப் பூவுக்குள்
தவமிருந்தால்
பட்டாம்பூச்சியாய்
பிறக்க முடியும்..!?
கண்கள் என்பது,
காதலர்களுக்குள் வெறுமனே
தகவல் பரிமாறிக்கொள்ளும்
பேஜர் மட்டுமல்ல...
ஒருவர் இதயத்துடிப்பை இன்னொருவருக்கு
தெரியப்படுத்தும் E.C.G-யும் கூட....
எனது பெயரைத் தெரிந்து கொள்ள
ஞாபகம் ஆசைப்படுகிறது
ஒரு கடிதம் எழுதேன்....
விழி பின்னி
விரல் பின்னி
விம்மிடும் இதயம் பின்னி
இதழ் பின்னி
இடை பின்னி
சுவாசம் பின்னி....
பின்னிப்பின்னி பிரியவோ
பிரியம்...
ஆதாம்-ஏவாள்
(தயவுசெய்து படித்ததோடு மட்டுமல்லாமல் வாக்களித்து, பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தவும்).
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)